
தஞ்சம் தந்த வஞ்சகனே
சாதுவாய் இருந்தவனை கேவலப்படுத்தி துரத்திவிட்டு சந்தோஷம் கண்டாள். சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போன்று பல வருடத்திற்கு பிறகு அவளால் அரக்கனாக மாறிய பணக்காரன் யாஷ்விக்கை சந்திக்கிறாள் சிரிக்கவே தெரியாத மகிழினி. அவனது ஆண்மையை கேவலப்படுத்தி சிறைக்கு அனுப்பி....
சாதுவாய் இருந்தவனை கேவலப்படுத்தி துரத்திவிட்டு சந்தோஷம் கண்டாள். சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போன்று பல வருடத்திற்கு பிறகு அவளால் அரக்கனாக மாறிய பணக்காரன் யாஷ்விக்கை சந்திக்கிறாள் சிரிக்கவே தெரியாத மகிழினி. அவனது ஆண்மையை கேவலப்படுத்தி சிறைக்கு அனுப்பி ஊரைவிட்டே ஓட வைத்தவளை அவன் காலடியில் புழுவாய் நசுக்குகிறான். எழுந்து ஓட முயற்சித்தாலும் மறுபடியும் அவள் காலை பிடித்து இழுத்து தன் காலடியிலேயே விழ வைக்கிறான். இருந்தாலும் கர்வத்தின் ராணியும் அவ்வளவு சீக்கிரம் இறங்கி போபவள் கிடையாது. அவனிடம் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் எதிர்க்கிறாள். இவர்களின் மோதலுக்கு இடையே மழுங்கிப் போன இவர்களுடைய கல்லூரி காதல் எட்டிப் பார்க்குமா? இல்லையேல் வாழ்நாள் முழுவதும் சண்டையிலேயே கழியுமா? என்று ஒரு பக்கம் விதி யோசிக்க, இன்னொரு பக்கம் "ஐயோ கடவுளே கல்யாண வீட்டுல ஓசி சாப்பாடு சாப்பிட வந்த என் கழுத்துல தாலி கட்டிட்டானே இந்த ரவுடி கஜா. என் வயித்துல இருக்கிற பிள்ளைக்கும் அதோட அப்பனுக்கும் என்ன பதில் சொல்லப் போறேனோ" என்று மைண்ட் வாய்ஸை ஓட்டிக்கொண்டிருந்த ராஜியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியே செழியன் குடும்பத்திற்குள் வில்லத்தனமான திட்டத்தோடு நுழைகிறான் இரண்டாவது நாயகன் பிரணவ். ரவுடியாக இருப்பவன் எதற்கு தன்னை நல்லவனாய் காட்டிக் கொண்டு குடும்பத்திற்குள் நுழைந்தான். எதையும் அறியாத கர்ப்பிணி அப்பாவி பெண்ணை எதற்கு பலி ஆடாக மாற்றுகிறான். யாருக்கோ குழந்தையை வயிற்றில் சுமப்பவளை காதலிப்பானா? இல்லை தேவை முடிந்து கழட்டி விடுவானா? என்பதே தஞ்சம் தந்த வஞ்சகனே என்னும் நாவலில் பார்ப்போம். தெரிந்து கொள்ள வாசியுங்கள் பாக்கெட் எஃப்எம்ல்...