
ஆழியின் தேவதை
நீல நிறக் கடலின் ஆழத்தில், சூரிய ஒளி பாயாத ஒரு மாய உலகில், நீரா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு விளையாட்டுப் பந்தயம் அவளது வாலை வலிக்கச் செய்து, அவளது முகத்தில் இருந்த சிரிப்பை மறையச் செய்கிறது.....
நீல நிறக் கடலின் ஆழத்தில், சூரிய ஒளி பாயாத ஒரு மாய உலகில், நீரா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு விளையாட்டுப் பந்தயம் அவளது வாலை வலிக்கச் செய்து, அவளது முகத்தில் இருந்த சிரிப்பை மறையச் செய்கிறது. மனித உலகம் எவ்வளவு மோசமானது என்று அவளது குடும்பத்தினர் பேசும்போது, நீராவுக்குள் கேள்விகள் எழுகின்றன. மனித உலகம் வானத்தைத் தொடும் பெரிய கட்டிடங்களைக் கொண்டதா? அது எவ்வளவு அழகாக இருக்கும்? ஒருநாள், கடலின் விளிம்பில் நின்று மனித உலகின் விளக்குகளைப் பார்த்து, 'நான் ஒருநாள் அந்த உலகத்தைப் பார்க்கப் போகிறேன்' என்று நீரா சபதம் செய்கிறாள். ஆனால் அவளது குடும்பம் அவளிடம் மறைக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. மனிதர்களை நம்பாதே என்று அவளது தாய் எச்சரிக்கும்போது, நீரா குழப்பமடைகிறாள். மனித உலகம் அவ்வளவு மோசமானதா? அந்த இரவில், கடலுக்குள் மெதுவாக மிதந்து வரும் ஒரு பழைய புகைப்படத்தைப் பார்க்கிறாள். அதில் சிரித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்ணின் முகம், அவளது தாயைப் போலவே இருக்கிறது! இது எப்படி சாத்தியம்? நீராவுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. அவளது குடும்பம் மறைக்கும் அந்த ரகசியம் என்ன? மனித உலகத்திற்கும் அவளது குடும்பத்திற்கும் என்ன தொடர்பு?
- E1. ஆழியின் தேவதை
- E2. கடலின் எல்லை
- E3. கனவுகள்
- E4. கருப்பு விஷம்
- E5. ஒரு புதிய உலகம்
- E6. முதல் உரையாடல்
- E7. பழைய புகைப்படம்
- E8. ஆழி இதயம்
- E9. ஆழியின் ஒளி
- E10. ஆழி இதயத்தின் கதை
- E11. காயங்களும் கண்ணீரும்
- E12. குழப்பம்
- E13. ஆகாஷின் அதிர்ச்சி
- E14. பச்சை ஊசி
- E15. கிரிடம்
- E16. அம்மா
- E17. இந்திரன்
- E18. மறைக்கப்பட்ட உண்மை
- E19. நீல ஒளியின் விழிப்பு
- E20. சொல்ல முடியாத காதல்